டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கர்நாடக அரசு ஆண்டு தோறும் கலை, இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கி வருகிறது. 2025ம் ஆண்டுக்கான கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலை உலகைச் சேர்ந்த நடிகை சரோஜாதேவி, நடிகர் விஷ்ணுவர்தன் ஆகியோருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமய்யா தலைமையில் நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு இதனை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் "திரைத்துறையில் சாதனை புரிந்ததற்காக நடிகர் விஷ்ணுவர்தன், நடிகை சரோஜாதேவி ஆகியோருக்கு கர்நாடகத்தின் மிக உயரிய விருதான கா்நாடக ரத்னா விருது வழங்குவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது" என்றார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த விஷ்ணுவர்தன் கடந்த 2009ம் ஆண்டு காலாமானர். தமிழ் நாட்டில் 'கன்னடத்து பைங்கிளி' என அழைக்கப்பட்ட நடிகை சரோஜாதேவி கடந்த ஜூலை 14ந்தேதி மரணம் அடைந்தார்.