ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

சமீபத்தில் வெளியான மலையாளப் படமான லோகா சாப்டர் 1 : சந்திரா படம் 200 கோடியை தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் உமனாக கலக்கி இருந்தார். இந்த படத்தின் கதையை எழுதியவர் நடிகை சாந்தி பாலச்சந்திரன். தரங்கம், ஜல்லிக்கட்டு, குல்மொஹர் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற சாந்தி. தமிழில் 'ஸ்வீட் காரம் காபி' தொடரில் நடித்திருந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
லோகா படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: 'லோகா' என் இதயத்திற்குப் மிகவும் நெருக்கமானது. டொமினிக் மற்றும் லோகா குழுவோடு சேர்ந்து நாட்டுப்புறக் கதைகள், கற்பனை, வலுவான பெண் கதையை ஒருங்கிணைப்பது சவாலானதோடு நிறைவான பயணமாக இருந்தது. உலகம் முழுவதும் பார்வையாளர்கள் இப்படத்தை இத்தனை அன்போடு ஏற்றுக் கொள்வதைப் பார்க்கும் போது நான் அளவிட முடியாத நன்றியுணர்வில் மூழ்குகிறேன்.
சேப்டர் 1 போலவே, சேப்டர் 2விலும் எனது பணி தொடர்கிறது. எங்கள் திறமையான கூட்டாளர்களை உற்சாகப்படுத்தும் திரைக்கதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதே எனது ஆசை. அதோடு நடிப்பையும் தொடர்வேன். இரண்டும் எனது இரண்டு கண்கள் போன்றது. என்கிறார்.




