அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தமிழ் சினிமாவில் 'சிவாஜி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஸ்ரேயா. அந்தப் படத்திற்குப் பிறகு அவரது சில தவறான தேர்வுகளால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கோஷீவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு பெண் குழந்தைக்கும் தாயானார் ஸ்ரேயா.
இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்து இன்று வெளிவந்துள்ள 'மிராய்' படம் முதல் காட்சியிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ரேயாவுக்கு நேற்று 41வது பிறந்தநாள். தனது பிறந்தநாளை கணவர், குழந்தையுடன் இலங்கையில் கொண்டாடி வருகிறார்.
அங்கு கடற்கரையில் பிகினி ஆடையுடன் கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். 40 வயதைக் கடந்தாலும் ஸ்ரேயா அவருடைய உடலை கட்டுக்குள் வைத்துள்ளார். அதனால், அவர் பிகினி அணிந்தாலும் பொருத்தமாகவே உள்ளது. அதனால்தான் அவருடைய பதிவுக்கு அத்தனை லைக்குகள் வந்துள்ளது.