அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

1950களின் சென்னையை மையமாகக் கொண்டுதான் தென்னிந்திய திரையுலகம் இயங்கி வந்தது. போட்டி, பொறாமை, சர்ச்சை என அந்த கால கட்டம் இருந்தது. அதை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் 'காந்தா'.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், ஜானு சந்தர் இசையமைப்பில், துல்கல் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடிப்பில் உருவான இந்தப் படத்தை செப்டம்பர் 12ம் தேதி வெளியிடுவதாக இருந்தார்கள். இந்நிலையில் படத்தைத் தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இப்படத்தை துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. அவர்கள் தயாரித்து வெளிவந்த மலையாளப் படமான 'லோகா' வெற்றிகரமாக ஓடி வருவால் அதன் ஓட்டம் 'காந்தா' படத்தால் பாதித்துவிடக் கூடாதென தள்ளி வைத்துள்ளார்கள்.
தமிழில் அடுத்து அக்டோபர் 1ல் 'இட்லி கடை' படமும், அக்டோபர் 17ல் தீபாவளியை முன்னிட்டு, 'பைசன், டீசல், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியூட்' ஆகிய படங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தீபாவளி வெளியீட்டில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியூட்' ஆகிய இரண்டு படங்களில் ஒரு படம் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தீபாவளி போட்டியில் 'காந்தா' படமும் இணைய நிறைய வாய்ப்பு உள்ளது.
விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்கள்.