கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தன். ஒரு காலத்தில் அங்கு முன்னணி நடிகராக இருந்தார். ரஜினிக்கு நெருக்கமான இவர் ரஜினியுடன் 'விடுதலை' படத்தில் நடித்தார். அதை கே.பாலாஜி தயாரித்தார். ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'குர்பானி' படத்தின் ரீமேக் இது. அதன்பிறகு ரஜினி நடித்த 'ஸ்ரீராகவேந்தர்' படத்திலும், லட்சுமி இயக்கிய 'மழலை பட்டாளம்' படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
தமிழில் அவர் ஹீரோவாக நடித்த ஒரே படம் 'அலைகள்'. இதுதான் தமிழில் அவருக்கு முதல் படமும் அது தான். அவருடன் சந்திரலேகா, சோ, மனோரமா, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார்.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் 'துளசி' என்ற படத்தைத் தயாரிக்க ஸ்ரீதர் முடிவு செய்தார், அதில் தமிழில் ஏ.வி.எம். ராஜனும், தெலுங்கில் சோபன் பாபுவும் நடிப்பதாக இருந்தது. 4 ஆயிரம் அடி படம் தயாரான பிறகு இந்த கதையின் மீது ஸ்ரீதருக்கு சந்தேகம் வந்தது. இதனை மக்கள் ஏற்பார்களா என்று கவலைப்பட்டார். இதனால் படத்தை கைவிட்டார்.
பின்னர் இந்த கதையில் சில மாற்றங்களை செய்து அவர் இயக்கிய படம்தான் 'அலைகள்'. ஏவிஎம் ராஜன் வேறு படங்களுக்கு சென்று விட்ட நிலையில் கன்னடத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த விஷ்ணுவர்தனை அழைத்து வந்து நடிக்க வைத்தார். இந்த படம் வெற்றி பெறாததால் விஷ்ணுவர்தன் தமிழில் தொடர்ந்து நடிக்கவில்லை. குற்றங்களுக்காக ஜெயிலுக்கு சென்று வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியின் கதை.