சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படத்தில் நடித்து வரும் மிருணாள் தாக்கூர், தனுஷ் மற்றும் அவரது சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்.
இந்நிலையில் மிருணாள் தாகூர் நடித்த படத்தின் டீசருக்கு கமெண்ட் கொடுத்தார் தனுஷ். அதற்கு அவர் ஒரு ஹார்ட் எமோஜியை போட்டிருந்தார். அதையடுத்து தனுஷ் நடித்து வெளியாகி உள்ள 'தேரே இஷ்க் மே' படம் தொடர்பாகவும் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் போட்டு இருந்தார் மிருணாள் தாக்கூர். அதைப்பார்த்து தனுசும், மிருணாள் தாக்கூரும் காதலிப்பதாக ஊடங்களில் செய்தி பரவ தொடங்கியது. ஆனால் தனுஷ் எனது நண்பர் மட்டுமே என்று அந்த செய்திக்கு ஒரு பதில் கொடுத்திருந்தார் மிருணாள் தாக்கூர்.
இப்படியான நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் என்பவருடன் மிருணாள் தாக்கூர் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மும்பையில் நடக்கும் பார்ட்டிகளில் அவர்கள் இருவரும் சந்தித்து பேசி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு, தனுஷை தான் காதலிப்பதாக செய்திகள் வெளியானபோது அவர் நண்பர் மட்டுமே என்று கூறிய மிருணாள் தாக்கூர், ஸ்ரேயாஸ் ஐயர் விவகாரத்தில் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




