சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

கடந்த 2013ம் ஆண்டில் ஆனந்த் எல். ராய் இயக்கிய 'ராஞ்சனா' என்ற படத்தில் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் தனுஷ். அவர் நடித்த அந்த முதல் படமே 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. என்றாலும் அதன்பிறகு ஹிந்தியில் தனுஷ் நடித்த 'ஷமிதாப், அட்ராங்கிரே' போன்ற படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் ஹிந்தியில் அவர் நடித்துள்ள நான்காவது படமான 'தேரே இஷ்க் மே' என்ற படம் நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தையும் ஆனந்த் எல்.ராய் இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக கிர்த்தி சனோன் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் நேற்று முதல் நாளில் ஹிந்தியில் மட்டும் இப்படம் 15.06 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதேபோல் கிர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த 'ரிவால்வர் ரீட்டா' படமும் நேற்று வெளியானது. இந்த படம் முதல் நாளில் இந்திய அளவில் 65 லட்சம் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.




