பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி சமீபகாலமாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
'நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான 'வினோதய சித்தம்' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக திரும்புகிறார் சமுத்திரக்கனி. அதன்படி, சமீபத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார் சமுத்திரக்கனி. இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இது எல்லாம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சமுத்திரக்கனி தெலுங்கில் பவன் கல்யாண், நானி போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.