ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
'சட்டம் ஒரு இருட்டரை - இரண்டாம் பாகம், தொட்டால் தொடரும், சேதுபூமி, 6 அதிசயம், நேத்ரா, அயோத்தி, ஒரு நொடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தமன். அவர் நடித்து முடித்துள்ள 'ஜென்ம நட்சத்திரம்' படம் வருகிற 17ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றிற்கு அவரே கதை, திரைக்கதை எழுதி உள்ளார். இந்த படத்தை 'ஜென்ம நட்சத்திரம்' படத்தை தயாரித்த பெஸ்ட்காஸ்ட் ஸ்டூடியோ சார்பில் முரளி கபிர்தாஸ் தயாரிக்கிறார், பி.மணிவர்மன் இயக்குகிறார்.
சென்னை மற்றும் டில்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தப் படம் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது. படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. விரைவில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது. இரண்டு பாகங்களாக படம் தயாராகிறதாம்.