சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கும் படம் களம்காவல். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விநாயகன் நடித்துள்ளார். இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் இயக்கியுள்ளார். படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார். ஆச்சரியமாக மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்திலும் விநாயகன் ஒரு துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஆனால் முதலில் மம்முட்டியின் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் பிரித்விராஜ் தான் என்று சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் ஜிதின் கே ஜோஸ்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை எழுதும்போதே பிரித்விராஜை மனதில் வைத்து தான் எழுதினேன். ஆனால் அப்போது அவர் எம்புரான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். இந்த கதையை கேட்டுவிட்டு நிச்சயமாக இந்த கதாபாத்திரம் மம்முட்டிக்கு பொருத்தமாக இருக்கும். அவரிடம் சொல்லுங்கள் என்று சொன்னார். அவர் சொன்னது போலவே மம்முட்டிக்கு அந்த கதாபாத்திரமும் பிடித்துப்போய், அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் படத்தை தயாரிக்கவும் முன் வந்தார். அதே சமயம் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகனை நடிக்க வைக்க சிபாரிசு செய்ததும் மம்முட்டி தான்” என்று கூறியுள்ளார்.