வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி |

தமிழ் சினிமாவில் 1950களில் கதையை தாண்டி ஒரு சில நடன காட்சிகள் இடம்பெறும். அப்படியான நடன காட்சிகளில் ஆடி பின்னர் நடிகையாகவும் புகழ் பெற்றவர்கள்தான் பத்மினி, ராகினி, லலிதா சகோதரிகள். இவர்கள் 'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்று அழைக்கப்பட்டார்கள்.
இதேபோன்று தமிழ்நாட்டில் பிறந்த சாயி-சுப்புலட்சுமி சகோதரிகளும் தமிழ் சினிமாவில் நடனமாடி புகழ்பெற்றார்கள். பின்னர் நடிக்கவும் செய்தார்கள். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை, பத்மினி சகோதரிகள் போன்று இவர்கள் புகழ்பெறவில்லை.
இந்த சகோதரிகள் பாடகி பி.ஏ.பெரியநாயகி, நடிகை ஆர்.பத்மா ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள். இவ்விருவரும் தமிழ் படங்களில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்திப் படங்களிலும் நடனமாடியுள்ளனர்.
முறைப்படி நடனம் கற்ற இந்த சகோதரிகள் 'மலைக்கள்ளன்' படத்தில் அறிமுகமானார்கள். அந்த படத்தில் இடம்பெற்ற நாட்டிய நாடகத்தில் சாயி அல்லியாகவும், சுப்புலக்ஷ்மி வள்ளியாகவும் நடித்திருந்தனர். அதன் பிறகு ரத்தக்கண்ணீர், டாக்டர் சாவித்திரி, கோமதியின் காதலன், தாய்க்குப்பின் தாரம் பெரிய கோவில், கண் திறந்தது, ஒரே வழி , பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் உள்ளிட்ட பல படங்களில் நடனமாடியுள்ளனர்.
என்.எஸ்.கிருஷ்ணன் இவர்களுக்கு 'பம்பர சகோதரிகள்' என்ற பட்டம் தந்தார். பம்பரம்போன்று சுழன்று ஆடியதால் இந்த பட்டம். சிவாஜியின் அன்னை இல்ல திறப்பு விழாவில் இவர்கள் 3 மணி நேரம் நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார்கள்.