நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தனது வாழ்க்கை படத்தில் தானே நடிக்கிற வாய்ப்பு சிலருக்கு மட்டுமே அமையும். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் முதல் பல நடிகைகள் நடித்தார்கள். ஷகிலாவின் கதையில் சில நடிகைகள் நடித்தார்கள், சாவித்ரி கதையில் கீர்த்தி சுரேஷ் நடித்தார்.
ஆனால் சுதா சந்திரன் தன் கதையில் தானே நடித்தார். திருச்சி அருகே வயலூர்தான் சுதாவின் சொந்த ஊர். ஆனால் அவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். முறைப்படி நாட்டியம் கற்று இந்திய அளவில் புகழ்பெற்ற நடன கலைஞரான இருந்தார். சாலை விபத்து ஒன்றில் அவர் தனது ஒரு காலை இழந்தார்.
அதன்பிறகு முறையான பயிற்சியெடுத்து செயற்கை கால் பொருத்தி மீண்டும் நடனமாடினார். அவரது தன்னம்பிக்கையும, விடா முயற்சியும் உலகிற்கே எடுத்துக் காட்டானது. அவரது வாழ்க்கை 'மயூரி' என்ற பெயரில் தெலுங்கில் தயாரானது. பின்னர் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது.
இந்த படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கினார். சுதாவுடன் பி.எல்.நாராயணா, வீரமாச்சேனி, ஒய்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்தனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை அமைத்திருந்தார். 1985ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தில் வெளியிடப்பட்டு பெரிய வெற்றி பெற்றது.