போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இதிலும் குறிப்பாக தெலுங்கில் 'சீதா ராமம், லக்கி பாஸ்கர்' என தொடர் படங்களின் வெற்றியால் தெலுங்கு மொழி படங்களில் அதிகளவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
இந்த நிலையில் மற்றொரு புதிய தெலுங்கு படத்தையும் ஒப்பந்தம் செய்துள்ளார் துல்கர் சல்மான். அதன்படி, பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான பீபுல் மீடியா நிறுவனம் தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குவதற்கான பேச்சு வார்த்தை தெலுங்கில் 'ரச்சா, பெங்கால் டைகர், செட்டிமார்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சம்பத் நந்தி உடன் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.