சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஹாலிவுட்டில் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் 'ஜூடோபியா 2'. இந்த படத்தில் போலீஸ் கேரக்டராக வரும் ஜூடி ஹாப்ஸி க்கு பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஹிந்தியில் டப்பிங் பேசி உள்ளார். வருகிற 28ம் தேதி படம் வெளிவருகிறது. ஆங்கிலத்துடன், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது.
புகழ்பெற்ற ஜூடி ஹாப்ஸ் கேரக்டருக்கு டப்பிங் பேசியிருப்பது குறித்து ஷ்ரத்தா கபூர் கூறும்போது "ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவள் தன் நிலையில் உறுதியாக இருந்ததை நிச்சயமாக என்னால் புரிந்து கொள்ள முடியும். அவள் அதிகாரம் மிக்கவள், தேவைப்படும் தருணத்தில் மென்மையாகவும் இருப்பாள். ஜூடியாக இருந்தது மகிழ்ச்சி.
அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தது மிகவும் வித்தியாசமான அனுபவம். வேடிக்கையாகவும் கூலாகவும் இருக்கும் கதாபாத்திரத்திற்கு நான் குரல் கொடுத்தது சுவாரஸ்யமாக இருந்தது. அவளுக்குப் பொருந்தும்படி என் குரலை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அவள் கோபம், வேடிக்கை என எல்லாவற்றையும் கவனித்து அதற்கேற்ப குரல் கொடுத்தேன். உண்மையிலேயே அந்தக் கதாபாத்திரத்தின் குரலாக இருக்க வேண்டும் என்று விரும்பி அதையே செய்தேன்" என்றார்.