பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்தின் டிரைலர் நேற்று காலை யு டியுப் தளத்தில் வெளியானது. 24 மணி நேரத்தில் அந்த டிரைலர் 47 மில்லியன் பார்வைகளைப் பெற்று தென்னிந்தியத் திரைப்படங்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன்பு 'புஷ்பா 2' டிரைலர் 24 மணி நேரத்தில் 44 மில்லியன் பார்வைகளைப் பெற்றதுதான் சாதனையாக இருந்தது. அதை தற்போது 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் முறியடித்துள்ளது. தீவிர அரசியலில் இறங்கிய பிறகு பவன் கல்யாண் நடித்த படம் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வருகிறது. இருப்பினும் தெலுங்கின் தற்போதைய டாப் ஹீரோக்களின் சாதனையை முறியடித்தள்ளது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
அனைத்து மொழிகளிலும் சேர்த்து 61.7 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் பெற்றுள்ளது. இது படம் மீதான எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகரித்துள்ளது. ஜுலை 24ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் டிரைலரின் வரவேற்பால் இந்திய அளவிலும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.