வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

ஆந்திர மாநிலத்தில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்தது அந்த மாநில அரசு. அதனால் டிக்கெட் கட்டணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. இதன் காரணமாக பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடும் போது அதற்கான வசூலை அள்ள நீண்ட நாட்களாகும்.
தெலுங்கில் அடுத்தடுத்து சில பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவர உள்ளன. டிக்கெட் விலை கட்டுப்பாட்டால் அப்படங்களின் வசூல் வெகுவாக பாதிக்கப்படும். இதனிடையே, சமீபத்தில் விசாகப்பட்டிணத்தில் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், “என்னுடைய படங்களைக் குறி வைத்துத்தான் மாநில அரசு டிக்கெட் கட்டணங்களைக் குறைத்துள்ளது. என்னுடைய படங்களைத் திரையிட அரசு தடுத்து நிறுத்தினால் நான் பயப்படவும் மாட்டேன், பின் வாங்கவும் மாட்டேன். நிலைமை இன்னும் மோசமாகப் போனால், என்னுடைய படங்களை மக்களுக்கு இலவசமாகக் காட்டவும் தயங்க மாட்டேன்,” என்று அதிரடியாகப் பேசியுள்ளார்.
மேலும், “டிக்கெட் விலைகளில், வசூலில் வெளிப்படைத்தன்மை இல்லை என அரசு குற்றம் சாட்டுகிறது. மது விலைகளை நிர்ணயிப்பதில் அரசாங்கம் அந்த வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுகிறதா என அரசை நான் கேட்கிறேன்,” என்றும் கேட்டுள்ளார்.
பவன் கல்யாண் நடித்துள்ள 'பீம்லா நாயக்' படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.




