காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சூரிய பிரதாப் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ரூட்'. இத்திரைப்படம் சயின்ஸ் பிக்சன் ஜானரில் க்ரைம் த்ரில்லர் கதை களத்தை கலந்து உருவாகிறது.
இந்த படத்தில் கதாநாயகனாக கவுதம் ராம் கார்த்திக் நடிக்கின்றார். மேலும், இதில் கவுதம் ராம் கார்த்திக் போலீஸ் அதிகாரி தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அபர்சக்தி குரானா நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதில் கதாநாயகியாக பவ்யா தரிகா நடிக்கிறார். இந்த படத்தை வேரூஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தில் கவுதம் ராம் கார்த்திக் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை நிறைவு பெற்றுள்ளார் என இன்று அறிவித்துள்ளனர்.