டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சமூக வலைத்தளங்களில் டுவிட்டர் தளத்தில் தான் சினிமா பற்றிய தகவல்கள் பரிமாற்றம், சண்டைகள், பிரமோஷன் என பல விஷயங்கள் நடந்து வருகின்றன. தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு திரையுலகத்தினர்தான் டுவிட்டரை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த விதத்தில் 2021ல் டுவிட்டரில் சாதனை படைத்த தென்னிந்திய சினிமா பிரபலங்களை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தென்னிந்தியத் திரையுலகத்தில் அதிகமாக டுவீட் செய்யப்பட்ட நடிகைகளில் டாப் 10 இடத்தைப் பிடித்தவர்கள்
1.கீர்த்தி சுரேஷ்
2.பூஜா ஹெக்டே
3.சமந்தா
4.காஜல் அகர்வால்
5.மாளவிகா மோகனன்
6.ரகுல் ப்ரீத் சிங்
7.சாய் பல்லவி
8.தமன்னா
9.அனுஷ்கா
10.அனுபமா பரமேஷ்வரன்
அதிகமாக டுவீட் செய்யப்பட்ட நடிகர்களில் டாப் 10 இடத்தைப் பிடித்தவர்கள்
1.விஜய்
2.பவன் கல்யாண்
3.மகேஷ் பாபு
4.சூர்யா
5.ஜுனியர் என்டிஆர்
6.அல்லு அர்ஜுன்
7.ரஜினிகாந்த்
8.ராம் சரண்
9.தனுஷ்
10.அஜித்குமார்
2021ல் அதிகமாக டுவீட் செய்யப்பட்ட படங்கள்
1.மாஸ்டர்
2.வலிமை
3.பீஸ்ட்
4.ஜெய் பீம்
5.வக்கீல் சாப்
6.ஆர்ஆர்ஆர்
7.சர்காரு வாரி பாட்டா
8.புஷ்பா
9.டாக்டர்
10.கேஜிஎப் 2
நடிகைகள் தென்னிந்திய மொழிகளில் நடிப்பதால் அவர்களை தமிழ் நடிகைகள் என பிரித்துப் பார்க்க முடியாது.
நடிகர்களைப் பொறுத்தவரையில் விஜய், சூர்யா, ரஜினிகாந்த், தனுஷ், அஜித்குமார் என ஐந்து தமிழ் நடிகர்கள் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார்கள். இவர்களில் விஜய் முதலிடத்தைப் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. அஜித் 10வது இடத்தைப் பிடித்திருப்பதுதான் ஆச்சரியம். அஜித்திற்கு சொந்தமான டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படங்களைப் பொறுத்தவரையில் டாப் 10ல் முதல் 4 இடங்களை தமிழ்ப் படங்களே பிடித்திருக்கின்றன. 'டாக்டர்' படமும் இந்த டாப் 10ல் இடம் பிடித்திருப்பது ஆச்சரியம்தான்.
2022லும் தமிழ்ப் படங்கள் தான் டுவிட்டரில் ஆட்சி செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை.




