‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தானா. அல்லு அர்ஜுன் ஜோடியாக அவர் நடித்துள்ள 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் இந்த வாரம் 17ம் தேதி 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 'ஆர்ஆர்ஆர்' இயக்குனர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புஷ்பா குழுவினரை வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் கதாநாயகி ராஷ்மிகா, “கீதா கோவிந்தம்' படத்தின் இசை வெளியீட்டில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்ட போது, அவருடன் நடிக்க வேண்டும் என்று என்னுடைய ஆசையைத் தெரிவித்தேன். இன்று நான் அவருடைய ஸ்ரீ வள்ளி. இந்த வாய்ப்பை வழங்கிய அல்லு அர்ஜுனுக்கு நன்றி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மிகவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.
இந்தப் படத்திற்காக நான் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நடித்தேன். அதனால் எனது பெற்றோரைக் கூடப் பார்க்கவில்லை. அவர்கள் என்னை மறுத்துவிட்டார்கள். அதனால் சுகுமார் சார் என்னை ததெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உடனே அதற்கான விண்ணப்பத்தை அனுப்புகிறேன்.
அல்லு அர்ஜுனுக்காக புஷ்பா படத்தைப் பார்க்க ரசிகர்கள் வந்தால் 5 முதல் 10 சதவீதம் பேராவது என்னையும் பார்க்க வருவார்கள். இப்படத்தை ஸ்டார்களுக்காகக் பார்க்காமல் அந்தக் கதாபாத்திரங்களுக்காகப் பார்க்க வேண்டும் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். குறிச்சி வச்சிக்குங்க, டிசம்பர் 17ம் தேதி ஒரு சிறப்பான டிரீட்டை நீங்க பார்க்கப் போறீங்க,” என்றார்.