அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பராசக்தி'. 1960ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது.
ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே ஸ்ரீலீலா, அதர்வா டப்பிங் பேச தொடங்கிய போது அது குறித்த ஒரு வீடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முதல் சிவகார்த்திகேயனும் டப்பிங் பேச தொடங்கி இருக்கிறார். அதுகுறித்த ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் அவர் டப்பிங் பேசுவது மட்டுமின்றி பராசக்தி படத்தில் அவர் நடித்துள்ள சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.