மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! |
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே போதைப்பொருள் பழக்கம் இருந்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு உண்டு. அப்படி பல வருடங்களுக்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுளக்ஸ் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் இவர். அதேபோல வளர்ந்து வரும் இளம் நடிகரான மஞ்சும்மேல் பாய்ஸ் புகழ் ஸ்ரீநாத் பாஷி (குணா குகைக்குள் விழுந்தவர்) என்பவரும் படப்பிடிப்பின் போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் மீதும் குற்றச்சாட்டு உண்டு. அதற்காக அவர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கையும் எடுத்தது.
இந்த நிலையில் சமீபத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை கேரளாவில் ஒரு இடத்தில் நடத்திய சோதனையில் சுமார் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா உடன் ஒரு பெண்ணும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் மேலே சொன்ன இரண்டு நடிகர்களுக்கும் போதை பொருள் சப்ளை செய்ததாக கூறியுள்ளாராம். ஆனாலும் ஆதாரம் தேவை என்பதால் அந்த பெண்ணின் மொபைல் போனில் இருந்து ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ள தகவல்களை கம்ப்யூட்டர் வல்லுனர்களின் உதவியுடன் மீட்டெடுக்கும் பணியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இறங்கியுள்ளதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஆதாரங்கள் கிடைத்தால் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர்.