காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் |
தங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21.29 கோடி ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரி, 'லைகா' நிறுவனம் தொடர்ந்த மனுவுக்கு, நடிகர் விஷால் பதிலளிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா பைனான்சியர் அன்பு செழியனின், 'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம், நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம், 21.29 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, அனைத்து படங்களின் உரிமையை தருவதாக, விஷால் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி படங்களை வெளியிட்டதால், கடனுக்கு செலுத்திய தொகையை திருப்பித் தர உத்தரவிட கோரி, நடிகர் விஷாலுக்கு எதிராக, லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21.29 கோடி ரூபாயை, 30 சதவீத வட்டியுடனும், வழக்கு செலவு தொகையையும், நடிகர் விஷால் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்த கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், லைகா நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், 'நடிகர் விஷால், தற்போது 'சூப்பர் குட்' பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், மகுடம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். எனவே, அந்த படத்துக்கு பெறப்படும் தொகையையும், டிபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனுவுக்கு நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ., 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.