குஷ்புவை தொடர்ந்து கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறக்கம் : மதுரை மத்தியில் போட்டி | ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே | 'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி | ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. |

அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் 'ஆர்யன்' எனும் படத்தில் நடித்துள்ளார். செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இதில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் விஷ்ணு விஷால் கூறுகையில், ‛‛சீரியல் கில்லர் வகையிலான இப்படத்தில் துணிச்சலான போலீஸ் ரோலில் நடித்துள்ளார். ஆர்யன் படக் கதையை அமீர்கான் கேட்டு உடனே நடிக்க ஒத்துக் கொண்டார். ஆனால் சில காரணத்தால் நடிக்க இயலாமல் போனது. அமீர்கான் நடிக்க வேண்டிய ரோலில் செல்வராகவன் நடித்துள்ளார். அப்பா போலீஸ் அதிகாரி என்றாலும், அவரிடம் இந்த கேஸை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள் என்று மட்டும் கேட்டேன். இந்த கேஸை பொறுத்தவரை வெயிட் பண்ண வேண்டாம் என்றார்.
ஒரே ஆண்டில் எப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி என இரண்டு படங்கள் ஹிட் கொடுத்தேன். மற்ற தயாரிப்பில் நடிக்கும் போது நிறைய காலம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. எல்லா படமும் நான் தயாரிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. சில காரணங்கள் என்னை தயாரிப்பாளர் ஆக்கியது. ஆர்யன் படத்தில் செல்வராகவன் ரோல் பயங்கரமாக வந்திருக்கிறது. ஆர்யன் படமும் ராட்சசன் படமும் வேறு வேறு கதை களங்கள். ஷ்ரத்தா ஸ்ரீநாத் நிருபராக நடித்துள்ளார். 60, 65 வயது வரை இந்த சினிமாவில் நான் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு கிரிக்கெட் தவிர எதுவும் தெரியாது. அடுத்ததாக அருண்ராஜ் இயக்கத்தில் பாக்சிங் கதையிலும், சதீஷ் இயக்கத்தில் லவ் ஸ்டோரி ஒன்றிலும் நடிக்கிறேன்'' என்றார்.