மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் 'ஆர்யன்'. வரும் அக்டோபர் 31ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி விஷ்ணு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது "ராயன் படத்தில் சந்தீப் கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்க வேண்டியது. தனுஷ் என்னிடம் இதுபற்றி பேசினார். என் கதாபாத்திரம் தொடர்பாக சில மாறுதல்கள் கூறினேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு அந்த மாற்றத்தையும் செய்தார். அதன் பின்னர் உடனடியாக படப்பிடிப்பிற்கு தேவையான கால்ஷீட் அந்த காலகட்டத்தில் என்னால் தர முடியவில்லை. இதனால் ராயன் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது" என தெரிவித்துள்ளார்.