மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் |

நடிகர் கார்த்திக்கு தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் இவர் நடித்துள்ள 'வா வாத்தியார்' படம் வருகின்ற டிசம்பர் 12ம் தேதியன்று திரைக்கு வருகிறது. தெலுங்கிலும் இப்படம் 'அண்ணாகாரு வொஸ்தாரு' என்கிற பெயரில் திரைக்கு வருகிறது. இதையொட்டி நேற்று இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கார்த்தி, "தெலுங்கில் அண்டே சுந்தரனிகி, சரிபோத சனிவாரம் ஆகிய படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா சமீபத்தில் என்னை சந்தித்து ஒரு புதிய கதையை கூறியுள்ளார். இந்த கதை அடுத்தகட்ட நகர்விற்காக காத்திருக்கிறேன். அவர் ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளர்" என தெரிவித்துள்ளார்.