தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

‛96' படத்தின் சின்ன வயது விஜய் சேதுபதியாக ஆதித்யா பாஸ்கரும், சின்ன வயது திரிஷாவாக கவுரி கிஷனும் நடித்தனர். தங்களின் பள்ளி பருவ நினைவுகளை இருவரும் மனக்கண்ணில் காண்பித்ததாக பலரும் இந்த ஜோடியை பாராட்டினர். தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கரின் மகன்தான் ஆதித்யா பாஸ்ர். இப்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத இவர்கள் நடிக்கிறார்கள். பெயரிடப்படாத இந்த படத்தில் சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ‛‛உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய ஜென் ஜீ தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் '96' படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கவரி கிஷன் ஜோடி திரையில் மேஜிக் செய்திருக்கிறார்கள்.படப்பிடிப்பு முடிந்துவிட்டது'' என்கிறார்.




