அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு | ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை |

தமிழ் சினிமாவில் கடந்த 10, 15 வருடங்களில் நிறைய புதியவர்கள் வந்து அவர்களுக்கான தனி இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களில் நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் குறிப்பிட வேண்டியவர்கள். இவர்கள் இருவரும் கல்லூரி காலத்திலேயே நண்பர்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். சிவாவுக்கு சீனியர் சந்தோஷ். இருவரும் திருச்சியில் உள்ள இஞ்சினியரிங் கல்லூரியில் படித்தவர்கள்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக இசையமைக்கும் படம் 'சேயோன்'. சிவகார்த்திகேயன், இயக்குனர், பாடலாசிரியர், நடிகர் அருண்ராஜா காமராஜ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் ஆகியோர் கல்லூரி காலத்து நண்பர்கள். ஆனால், அவர்கள் மூவரும் இதற்கு முன்பு ஒன்றாக இணைந்து 'கனா' படத்தைக் கொடுத்துவிட்டார்கள்.
நண்பன் சிவாவுடன் முதல்முறையாக இணைவது பற்றி சந்தோஷ் நாராயணன், “நட்பின் 24 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்பாவி கல்லூரி பிள்ளைகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்றாகக் கலை உருவாக்கிய பிறகு, தகுந்த காத்திருப்புக்குப் பிறகு, உனக்காக பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன் சிவா. இன்னும் அதிகமாக இந்தப் படத்தில் மிகுந்த ஆர்வமுள்ள கமல்ஹாசன் சாரின் குழுவுடன் வேலை செய்வதற்கு. என் முழு இதயத்துடன் உங்களை ஆதரிப்பேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.