விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் |

கடந்த 2019ம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் கைதி. ரூ.25 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 105 கோடி வசூலித்தது. இந்த படத்தில் கார்த்தியின் கேரக்டருக்கு ஒரு பிளாஷ்பேக் இருப்பது போன்று முடித்திருந்தார் லோகேஷ். அதோடு, இப்படத்தின்இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாகவும் அவர் கூறி வந்தார். இதனால் கூலி படத்திற்கு பிறகு கைதி 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது டிசி என்ற படத்தில் நடித்து வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தை இயக்குவதற்கு அல்லு அர்ஜுன், அமீர்கான் போன்றவர்களிடத்தில் கால்சீட் கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கைதி 2 படத்தை ஒருவேளை லோகேஷ் கனகராஜ் கிடப்பில் போட்டு விட்டாரோ என்ற கேள்விகளும் எழுந்தது. இந்த நேரத்தில் தான் தற்போது கார்த்தி நடித்திருக்கும் வா வாத்தியார் படம் வருகிற 12-ம் தேதி திரைக்கு வரும் நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, கைதி -2 குறித்து ரசிகர்கள் அவரிடத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள் . அப்போது, கைதி-2 விரைவில் வரும் என்று ஒரு அப்டேட் கொடுத்துள்ளார் கார்த்தி.