'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

அருண் ராஜா காமராஜ் முதலில் நடிகராக ராஜா ராணி, மான் கராத்தே மூலம் மக்களிடையே பிரபலமானார். இது அல்லாமல் அவர் 'நெருப்பு டா', 'வரலாம் வரலாம் வா', 'கொடி பறக்குதா', செம வெயிட்டு' உள்ளிட்ட பல பாடல்களை எழுதி, பாடினார். அதன் பின்னர் 'கனா', 'நெஞ்சுக்கு நீதி', 'லேபிள் வெப் தொடர்' போன்ற படைப்புகளை ஒரு இயக்குனராக தந்தார்.
கடந்தாண்டு வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பிற்கு பிறகு இந்த படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
தற்போது விஷ்ணு விஷால் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது "அருண் ராஜ காமராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் ஒரு வித்தியாசமான விளையாட்டு படம். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் அல்லது ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்கும்" என்றார்.
இதன் மூலம் கனா படத்திற்கு பிறகு மீண்டும் அருண் ராஜ காமராஜ் ஸ்போர்ட்ஸ் கதைக்களம் கொண்ட படத்தை கையில் எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




