Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் | உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

26 அக், 2025 - 11:22 IST
எழுத்தின் அளவு:
Chief-Minister-Stalin-praises-the-film-Bison
Advertisement


மாரி செல்வராஜ் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் பத்து நாட்களுக்கு முன்பு வெளியான படம் 'பைசன்'. இப்படம் 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று இப்படத்தின் வெற்றி விழாவையும் கொண்டாடினார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், 'பைசன்' படத்தைப் பார்த்துவிட்டு, படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், நாயகன் துருவ் விக்ரம் ஆகியோரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

மேலும், எக்ஸ் தளத்தில், “மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!

தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு 'sharp message'-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள்.

சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக 'பைசன்' மிளிர்கிறது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்!'' என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலினின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, “என் முதல் படமான பரியேறும் பெருமாளில் ஆரம்பித்து கர்ணன், மாமன்னன், வாழை, இப்போது பைசன் வரை என் மீதும் என் படைப்பின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்து ஆர்வமாய் பார்த்து நேரில் அழைத்து என்னை உச்சிமுகர்ந்து கொண்டாடும் உங்களின் அத்தனை பேரன்பிற்கும் பெரும் பிரியத்திற்கும் என் இதயத்திலிருந்து கசிந்துருகும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா,” என இயக்குனர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ்மீண்டும் விளையாட்டு படத்தை கையில் ... பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

27 அக், 2025 - 04:10 Report Abuse
Prasanna Krishnan R முதலில் மழைநீர் வெள்ளத்திற்கு நடவடிக்கை எடுங்கள்.
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
27 அக், 2025 - 09:10Report Abuse
angbu ganeshநாம்தான் இனி பொலம்பனும்...
Rate this:
26 அக், 2025 - 08:10 Report Abuse
N Sasikumar Yadhav தமிழக திராவிட மாடல் மொதல்வர் முழுநேர சினிமா விமர்சகராகி விட்டார் என்பது உண்மைதான் போலிருக்கிறது . ஒரே நாளில் 20 லட்சம் டன் நெல் சேமிப்பு கிடங்கு இல்லாமல் வீணாகிவிட்டது . திராவிட மாடலுக்கு வாரி வழங்கும் சாராயத்துக்கு இருக்கிற கிடங்கை போல நெல்லுக்கும் அமைக்க வேண்டும் விவசாயிகள் விவசாய கடன் தள்ளுபடிக்காக திராவிட மாடலுக்கு வாக்களித்துவிட்டு இப்போது நெல் மழையில் நனைந்துவிட்டதென ஒப்பாரி வைக்கிறார்கள்
Rate this:
sankar - Nellai,இந்தியா
26 அக், 2025 - 06:10 Report Abuse
sankar தயவுசெய்து ஜாதிபடங்களை ஊக்குவிக்க வேண்டாம்
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
27 அக், 2025 - 10:10Report Abuse
angbu ganeshஅவனுங்க அப்படி படம் எடுத்துட்டு ஜாலியா கார்ல போறானுங்க பங்காளவில வாழறானுங்க நாம்தான் இங்க .......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in