பிளாஷ்பேக்: 200 படங்களில் ஒரேஒரு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்தவர் | அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார் | வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை |

வரும் 12ம் தேதி கேரள சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. இதற்காக தகுதியான படங்களை தேர்வு செய்ய விருதுக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மலையாளப் படங்களுக்கான விருதுக் கமிட்டி தலைவராக பிரபல மலையாள சினிமா இயக்குனரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.டி.குஞ்சு முகம்மது நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்தக் கமிட்டியில் ஒரு பெண் சினிமா கலைஞர் உள்பட 6 பேர் உள்ளனர். இந்நிலையில் படங்களை தேர்வு செய்வதற்கான ஒரு ஆலோசனைக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்திற்கு வந்த விருதுக் கமிட்டியை சேர்ந்த பெண் சினிமா கலைஞரை குஞ்சு முகம்மது ஓட்டல் அறையில் வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் சினிமா கலைஞர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்தார். டைரக்டர் குஞ்சு முகம்மது மீது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பரிசோதித்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் அந்த பெண் கலைஞர் கேரளா முதல்வரிடம் மீண்டும் புகார் அளித்தார் இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த 12 நாட்களுக்குப் பிறகு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இது குறித்து பேசி உள்ள இயக்குனர் குஞ்சு முகம்மது "நான் அவமரியாதையாக நடந்து கொள்ளவில்லை. அவர் என்னை தவறாக புரிந்து கொண்டுவிட்டார். அவரிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.