பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் |

பழம்பெரும் இயக்குனரான டி ஆர் ராமண்ணா 1980களிலும் படங்களை இயக்கினார். அதில் ஒரு படம் தான் 'இலங்கேஸ்வரன்'. ராமாயணத்தில் வரும் தனித்தனி கதாபாத்திரங்களை கொண்டு ஏராளமான படங்கள் வந்திருந்த போதும் முதல் முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த படத்தில் இயக்கியிருந்தார்.
இலங்கேஸ்வரனாக நடிக்க அன்றைய முன்னணி நடிகர்கள் தயங்கிய நிலையில் கடைசியாக நடிகர் ராஜேஷ் இலங்கேஸ்வரனாக (ராவணனாக) நடிக்க வைத்தார். கே ஆர் விஜயா மண்டோதரியாகவும், ரேவதி சீதாவாகவும் ஸ்ரீபிரியா சூர்ப்பனயாகவும் நடித்தனர். ஸ்ரீ சிவகாமி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கே. முனிரத்னம் தயாரித்தார். எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். படம் வெற்றி பெறவில்லை.