2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள் | பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா | பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! |

பெங்களூரு ஹெப்பகோடியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த ஆண்டு போதை விருந்து நடந்தது. இதில் பிரபல தெலுங்கு நடிகை ஹேமா உள்பட 88 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் எம்.டி.எம்.ஏ மற்றும் கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நடிகை ஹேமா, தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் இருந்து நடிகை ஹேமாவை விடுவித்தது. அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.




