மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் | உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் | பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு |

வரும் 12ம் தேதி கேரள சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. இதற்காக தகுதியான படங்களை தேர்வு செய்ய விருதுக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மலையாளப் படங்களுக்கான விருதுக் கமிட்டி தலைவராக பிரபல மலையாள சினிமா இயக்குனரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.டி.குஞ்சு முகம்மது நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்தக் கமிட்டியில் ஒரு பெண் சினிமா கலைஞர் உள்பட 6 பேர் உள்ளனர். இந்நிலையில் படங்களை தேர்வு செய்வதற்கான ஒரு ஆலோசனைக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்திற்கு வந்த விருதுக் கமிட்டியை சேர்ந்த பெண் சினிமா கலைஞரை குஞ்சு முகம்மது ஓட்டல் அறையில் வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் சினிமா கலைஞர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்தார். டைரக்டர் குஞ்சு முகம்மது மீது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பரிசோதித்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் அந்த பெண் கலைஞர் கேரளா முதல்வரிடம் மீண்டும் புகார் அளித்தார் இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த 12 நாட்களுக்குப் பிறகு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இது குறித்து பேசி உள்ள இயக்குனர் குஞ்சு முகம்மது "நான் அவமரியாதையாக நடந்து கொள்ளவில்லை. அவர் என்னை தவறாக புரிந்து கொண்டுவிட்டார். அவரிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.