'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

மலையாளத்தில் கடந்த டிசம்பர் மாதம் சிறிய பட்ஜெட்டில் வெளியான படம் எக்கோ. நாய்கள் தங்களது எஜமானரிடம் காட்டும் விசுவாசத்தை மையப்படுத்தி ஒரு விறுவிறுப்பான திரில்லர் படமாக இதை இயக்கி இருந்தார் இயக்குனர் டிஞ்சித் அய்யத்தான். பல பிரபலங்களே கூட இந்தப் படத்தை ஆச்சரியப்பட்டு பாராட்டியுள்ளார்கள். நடிகர் தனுஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் டிஞ்சித் அய்யத்தானை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரபாஸ் உடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார் டிஞ்சித் அய்யத்தான்.
இந்த சந்திப்பின்போது அவருக்கு இறால் பிரியாணி விருந்தளித்து அசத்தியுள்ளார் பிரபாஸ். இது குறித்து தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள டிஞ்சித் அய்யத்தான், “சூப்பர் ஸ்டார் பிரபாஸ் உடனான சந்திப்பு நல்ல உரையாடல்கள், சிரிப்பு மற்றும் ஒரு அழகான விருந்து ஒரு அற்புதமான மாலை பொழுதாக அமைந்தது. மறக்க முடியாத நிகழ்வாக மாறிய பிரபாஸின் விருந்தோம்பலுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
மேலும் டிஞ்சித் அய்யத்தான் பிரபல தயாரிப்பாளரான ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒரு பக்கம் இந்த சந்திப்பு ஏதேச்சையானதா அல்லது பிரபாஸ் படத்தை டிஞ்சித் அய்யத்தான் இயக்க இருக்கிறாரா என்பது போன்ற யூகங்களும் இன்னொரு பக்கம் ஹோம்பலே நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய படத்தை தான் டிஞ்சித் அய்யத்தான் இயக்க இருக்கிறார் என்றும் அதனால் தான் இந்த சந்திப்பிற்காக அவருக்கு நன்றி கூறியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.




