நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் | உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் | பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் |

நடிகர் மம்முட்டி கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக ஓய்வெடுத்து வந்த நிலையில் மீண்டும் சுறுசுறுப்பாக மோகன்லாலுடன் தான் இணைந்து நடித்து வரும் பேட்ரியாட் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.. கொச்சியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கேரளாவில் குறிப்பிட்ட ஏழு மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.. இதனை தொடர்ந்து மம்முட்டி தனது வாக்கை செலுத்த விரும்பிய போது வாக்காளர் அவரது பெயர் விடுபட்டு போனது தெரிய வந்தது.
இதனால் அவரால் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த முடியாமல் போனது. இதற்கு முன்னதாக மம்முட்டி, கொச்சி பனம்பள்ளி நகரில் வசித்து வந்தார். அதன்பிறகு அவர் எர்ணாகுளத்திற்கு புதிய வீட்டிற்கு மாறினார். அதனால் பழைய வீட்டில் இருந்து தனது புதிய வீட்டின் முகவரிக்கு வாக்கு விபரங்களை மாற்ற தவறியதால், அவர் இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க இயலாமல் போனது என்று தெரியவந்துள்ளது.