தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட சவுராஷ்டிரா மக்கள் மதுரை, கும்பகோணம், சேலம் பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். டி.எம். சவுந்தரராஜன், வெண்ணிறாடை நிர்மலா உள்ளிட்ட பல கலைஞர்களை இந்த சமூகம் தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கிறது. அவர்களின் முக்கியமானவர் சுந்தரிபாய்.
அந்தக் காலத்திலேயே விளம்பர படங்களில் நடித்து புகழ்பெற்று அதன் பிறகு சினிமாவுக்கு வந்தவர். நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி பின் கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 200 படங்களுக்கு மேல் நடித்தார்.
1937ல் 'சுகுணசரசா' என்ற படத்தில் முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. ஜெமினி நிறுவனத்தின் முதல் படமான மதனகாமராஜன் படத்தில் கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். பின் கொத்தமங்கலம் சுப்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
1945ல் ஜெமினி நிறுவனத்தார் தயாரித்த 'கண்ணம்மா என் காதலி' படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம். கே. ராதா நடித்தார். இந்த ஒரு படம் தான் அவர் கதாநாயகியாக நடித்த படம்.
1948ல் ஜெமினி நிறுவனத்தின் 'சந்திரலேகா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஜெமினியின் வெற்றிப்படமான சம்சாரம் திரைப்படத்தில் வில்லி வேடத்தில் நடித்தார். 'வள்ளியின் செல்வன்' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
'ஆத்மி, நந்தனார், தாசி அபரஞ்சி, மிஸ் மாலினி, மூன்று பிள்ளைகள், அவ்வையார், பொம்மை கல்யாணம், வஞ்சிக்கோட்டை வாலிபன், தெய்வப்பிறவி, படிக்காத மேதை, அன்னை இல்லம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, செல்வம், கணவன், தேனும் பாலும், அரங்கேற்றம் , நினைத்ததை முடிப்பவன், சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்றவை சுந்தரி பாய் நடித்த முக்கிய படங்கள்.