முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாராகும் 'மரகத நாணயம் 2' | 'ஜனநாயகன்' வழக்கு நாளை, ஜனவரி 20ல் மீண்டும் விசாரணை | யஷ், பிரபாஸ் பாணியில் விஜய் சேதுபதி | 2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள் | பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா | பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' |

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து கடந்த தீபாவளி வாரத்தை முன்னிட்டு திரைக்கு வந்த படம் 'பைசன் காளமாடான்'.
இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து கடந்த வாரத்தில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது. ஓடிடி தளத்தில் இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இந்திய அணி கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், பைசன் படத்தை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, "பைசன் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு அருமையான திரைப்படம், மாரி செல்வராஜ் உங்கள் படங்கள் அனைத்தும் அழுத்தமாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாகவும் உள்ளது. இந்த எதார்த்தமான நடிப்பிற்காக துருவ் கடுமையாக உழைத்திருக்கிறார். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். படக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.




