ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

நடிகர் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'கர்ணன்'. இந்த படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைந்து படம் பண்ணுவதாக ஏற்கனவே செய்தி வந்தது. தற்போது தனுஷின் 56வது படத்தை இவர் இயக்க உள்ளார். இதனை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.
கடந்த சில மாதங்களாக இதன் முன் தயாரிப்பு பணிகளில் திவீரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மாரி செல்வராஜ் அளித்த பேட்டியில் தனுஷ் 56 படம் குறித்து கூறியதாவது, "நான் இதுவரை முயற்சி செய்யாத கதைக்களம் பிரீயட், பேண்டஸி மற்றும் அரசியல் கலந்த ஜானரில் இப்படம் உருவாகிறது. இந்த கதை ஆரம்பிக்கும் இடத்தில் தான் நிறைவு பெறும். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை உள்ளிட்ட படங்களின் தொடக்க புள்ளியாக இப்படம் உருவாகும் என்றார்.
இது முழுக்க பேண்டஸி படம் என கூற முடியாது, ஆனாலும், பேண்டஸி காட்சிகளும் இடம் பெறுகிறது. இப்போது தான் இந்த படம் சரியான பாதையை நோக்கி பயணிக்கிறது. இந்த கதையை முதலில் தனுஷ் உடன் பகிர்ந்த போது அவர் இது உங்கள் திரைப்பயணத்திலும், என் திரைபயணத்திலும் மிகப்பெரிய படமாக அமையும் என்றார்" என தெரிவித்துள்ளார்.