
விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்?
கார்த்திக் மகன் கவுதமை வைத்து கடல் எடுத்தார். மம்முட்டி மகன் துல்கரை வைத்து ஓ காதல் கண்மணி எடுத்தார். பொன்னியின் செல்வனில் பிரபு மகன் விக்ரம்பிரபு நடித்தார். இப்படி தனது படத்தில் பணியாற்றிய ஹீரோக்களின் வாரிசுகளை தனது படத்தில் நடிக்க வைப்பது மணிரத்னத்துக்கு பிடிக்கும். அந்தவகையில் ராவணன், பொன்னியின் செல்வனில் தன்னுடைய பணியாற்றி விக்ரம் மகனை அடுத்த படத்தில் நடிக்க வைக்கப்போகிறார் என்றார்கள்.
இதற்கிடையே, விஜய்சேதுபதியை வைத்து அடுத்த படம் இயக்கப்போகிறார் என்று புது தகவலும் கசிய, மணிரத்னம் அடுத்த பட ஹீரோ துருவ்வா? விஜய்சேதுபதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக மணிரத்னம் இயக்கும் படங்களை அவரின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அல்லது பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் எடுத்து கொடுப்பார். அந்த படங்களில் நடிப்பவர்கள், பணியாற்றுபவர்கள் சம்பளம் மிகக்குறைவாக இருக்கும். ஆனாலும் மணிரத்னம் படம் என்பதால் சம்பளம் பற்றி கவலைப்படாமல் பலர் நடிப்பார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!