சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் வாரணாசி படத்தில் ஹீரோவாக மகேஷ்பாபு நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ் கும்பா என்ற கேரக்டரில் வருகிறார். ராமாயண காலம், இந்த காலம் இரண்டையும் இணைக்கும் இந்த கதையில் வீல் சேரில் வரும் வில்லனாக பிருத்விராஜ் வரும் காட்சிகள் வெளி வந்துள்ளன. சில ஹாலிவுட் பட வில்லன் பாணியில் அவர் கேரக்டர் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீல் சேரில் ரோபோ கைகள் இருப்பதே அதற்கு காரணம்.
நீங்கள் என் படத்தில் நடிக்க முடியுமா என்று ராஜமவுலி மெசேஜ் அனுப்பியதும், அவர் ஆபீஸ் போய் கதை கேட்டு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் பிருத்விராஜ். அவர் மலையாளத்தில் முன்னணி ஹீரோ என்றாலும், மற்ற மொழிகளில் வில்லனாக நடிக்கிறார். அதற்கு ஹீரோவாக நடிப்பதை விட கூடுதலாக சம்பளம் வாங்குகிறார். அதை கொண்டு மலையாளத்தில் படங்கள் தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பும் சலார் படத்தில் வில்லனாக பிருத்விராஜ் நடித்தார்.
வாரணாசி படத்தில் பிரியங்கா சோப்ரா இருக்கிறார். அவருக்கும் ஹீரோவுக்கு இணையான முக்கியமான வேடம் என்று கூறப்படுகிறது. பொதுவாக ராஜமவுலி படங்களில் ஒரு வித கவர்ச்சி பாடல் இருக்கும். அதில் ஆடுபவர் யார் என்பதும் சஸ்பென்ஸ் ஆக உள்ளது. வாரணாசி தலைப்பு அறிவிப்பு விழாவில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு ஆடினார். அவர் படத்திலும் குத்தாட்டம் போட வாய்ப்பு இருக்குமா என தெரியவில்லை.