பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

தானாகவே அமைகிறதா இல்லை பிரபாஸிற்காக என்றே உருவாக்குகிறார்களா என்று நினைக்க தோன்றும் வகையில் தொடர்ந்து அதிக அளவில் இரண்டு பாகநகலாக உருவாகும் படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். பாகுபலி படம் இரண்டு பாகங்களாக உருவாகி இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அதன்பிறகு சலார், பின்னர் கல்கி ஆகிய படங்கள் அடுத்தடுத்து பிரபாஸ் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகின. இவற்றின் முதல் பாகங்கள் வெளியாகி உள்ளன இரண்டாம் பாகங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.
இதனை தொடர்ந்து தற்போது சீதா ராமம் புகழ் டைரக்டர் ஹனு ராகவபுடி பிரபாஸை வைத்து இயக்கும் பவுஸி திரைப்படமும் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என்று படத்தின் இயக்குனரே புதிய தகவலை தெரிவித்துள்ளார். பிரபாஸிற்கு இரண்டு விதமான பரிமாணங்கள் என்றும், முதல் பாகத்தில் ஒருவிதமாகவும் அதன்பிறகு வெளியாகும் இரண்டாம் பாகத்தில் ஒருவிதமாகவும் அவரது கதாபாத்திரம் இருக்கும் என்றும் இயக்குனர் ஹனு ராகவபுடி கூறியுள்ளார்.