டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

'ராட்சசன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ஆர்யன். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரவின் கே இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 31ம் தேதி இந்த படம் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்து வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மலையாள சினிமா குறித்து பேசிய விஷ்ணு விஷால், 'ஆர்டிஎக்ஸ்' மற்றும் 'ஆவேசம்' படங்கள் தன்னை கவர்ந்தன என்று கூறியுள்ளார்.. அது மட்டுமல்ல இயக்குனர் பசில் ஜோசப்பின் படங்கள் தன்னை வியக்க வைக்கின்றன என்றும் கூறினார். மேலும் ஆர்யன் படத்தில் மம்முட்டி நடித்த 'கண்ணூர் ஸ்குவாட்' படத்தின் பல காட்சிகளின் இன்ஸ்பிரேஷன் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2023ல் மம்முட்டி நடிப்பில் ரோபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் வெளியான கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம், ஒரு குற்றவாளியை தேடி ஒரு போலீஸ் அதிகாரியும் அவருடன் நான்கு பேர் கொண்ட குழுவினரும் பல மாநிலங்களுக்கு பயணித்து இறுதியில் குற்றவாளியை கண்டுபிடிப்பது போல கதை அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.