ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள 'ஆர்யன்' என்ற படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பிரவீன் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் திரைக்கு வந்த ஐந்து நாட்களில் 6.75 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது விஷ்ணு விஷால் கூறுகையில், ''நான் தயாரித்து நடிக்கும் 3வது படம் இந்த ஆர்யன். என் மகனின் பெயரை இந்த படத்திற்கு வைத்தேன். இந்த படத்தை பார்த்த என் மகன் படம் நன்றாக இருந்ததாக சொல்லி என்னை கட்டி பிடித்தார். அதைதான் இப்படத்தின் சக்ஸஸ் என்று நினைக்கிறேன்.
நான் நடித்த 'எப்ஐஆர், கட்டாகுஸ்தி' படங்கள் தியேட்டர் மட்டுமின்றி ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெற்றன. அதே மாதிரி இந்த படமும் ரசிகர்களின் ஆதரவு பெறும் என்று நம்புகிறேன். வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மேலும் என்னுடைய படங்களின் வெற்றிக்கு கதை விவாதங்களில் நான் பங்கேற்பதும் ஒரு முக்கிய காரணம். ஒவ்வொரு படத்தையும் வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இதை நான் ஒரு முக்கிய பொறுப்பாகவே செய்து வருகிறேன். நான் நடிக்கும் படங்கள் நன்றாக இல்லை என்றால் ரசிகர்கள் முதலில் ஹீரோக்களைதான் திட்டுவார்கள். இந்த நடிகருக்கு நல்ல கதையை தேர்வு செய்ய தெரியவில்லை என்று சொல்வார்கள்.
அதோடு நான் ஒரு ஹீரோவாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருப்பதால் கதையை ரொம்ப கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு அதிகமாக உள்ளது. அதனால்தான் நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் கதை விவாதங்களிலும் கலந்து கொள்கிறேன்'' என்கிறார் விஷ்ணு விஷால். இந்த ஆர்யன் படம் தெலுங்கில் வருகிற 7ம் தேதி வெளியாகிறது.




