துல்கர் சல்மானுக்கு பறந்த திடீர் நோட்டீஸ்! | மகேஷ்பாபுவின் கிண்டலுக்கு பிரியங்கா சோப்ரா பதில் | புராண பின்னணியில் புதிய அனிமேஷன் பாகுபலி : டீசர் வெளியீடு | தென்னிந்திய சினிமா தான் 'பெஸ்ட்', ஹிந்தியில் 'ஸ்லோ': ஷ்ரத்தா தாஸ் | கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு | இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் |

கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருபவர் நடிகை யாமி கவுதம். ‛ஆர்டிகிள் 370' உள்ளிட்ட பல படங்களில் அவரது கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. அந்தவகையில் மீண்டும் ஒரு வலிமையான கதை மற்றும் கேரக்டர் உடன் களமிறங்கி உள்ளார். அவரது நடிப்பில் அடுத்து ‛ஹக்' என்ற படம் நவ., 7ல் ரிலீஸாகிறது. அவருடன் இம்ரான் ஹாஸ்மி, பரிதி சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுபர்ன் வர்மா இயக்கி உள்ளார். நீதிமன்ற பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்திய சினிமாவில் பெண்களை மையமாக வைத்து உருவாகும் வலிமையான கதை அம்சம் நிறைந்த படங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த பேட்டி....
‛ஹக்' படத்தை நீங்கள் தேர்வு செய்ய எது காரணமாக இருந்தது?
சில கதைகள் நேரடியாக உங்களின் ஆள் மனதில் சென்று அமரும். இந்தப்படம் அப்படி ஒரு கதையை உடையது. இது ஒரு பெண்ணை பற்றியது. அவள் அமைதியாக இருக்க மறுப்பதன் ஏன். அவள் கிளர்ச்சி செய்ய விரும்பவில்லை ஆனால் அவள் அப்படி கேட்கப்படுவதற்கு தகுதியானவளாக இப்படம் உள்ளது. படத்தின் தலைப்பான ஹக் கூட அதைத்தான் சொல்ல வருகிறது.
உங்களின் முந்தைய வலிமையான பெண் கேரக்டர்கள் படங்களை விட இந்தப்படம் எவ்வளவு வேறுபடுகிறது?
இது மிகவும் உள்ளார்ந்த பாத்திரம். இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் பலமே அவளுடைய மவுனத்தில், இடைநிறுத்தங்களில், தன்னைச் சுற்றியுள்ள உலகம் அவளை உடைக்க முயற்சிக்கும்போது அவள் தன்னை எப்படிக் கட்டுப்படுத்துகிறாள் என்பதில் உள்ளது. இந்த படத்தின் வசனங்களை படித்தபோது, அந்த பெண் கேரக்டரை ஒரு பாதிக்கப்பட்டவளாகப் பார்க்கவில்லை, உலகின் சமநிலையை அமைதியாக மாற்றும் ஒருவராக பார்த்தேன். இது மிகவும் அரிதானது. அவளை உண்மையாக சித்தரிக்க எனக்கு பொறுப்பு என்று உணர்ந்தேன்.
படத்தின் டிரைலர் நீதிமன்றம் சார்ந்த சமூக விஷயங்களை பேசுகிறது. யதார்த்தத்தையும், பொழுதுபோக்கையும் எப்படி சமநிலைப்படுத்துகிறீர்கள்?
இன்றைய பார்வையாளர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர். அவர்களுக்கு பாடம் எடுப்பதை விரும்பவில்லை. தங்களை படத்துடன் உணரவும், தொடர்புபடுத்திக் கொள்ளவும் விரும்புகிறார்கள். எனவே அதை மனதில் வைத்து அதற்கு ஏற்றபடி பார்வையாளர்களுக்கு படம் கொடுக்க வேண்டுமே என்ற பதற்றம் உள்ளது. ஹக் என்பது ஒரு விஷயத்தை நிரூபிப்பது பற்றியது அல்ல. அது சங்கடமாக இருந்தாலும் அவசியமாக இருக்கும்போது உண்மை எப்படி இருக்கும் என்பதைக் காண்பிப்பது பற்றியது.
ஒரு நடிகையாக உங்களின் பெரிய பலம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
நேர்மை என்று நினைக்கிறேன். கேமராவுக்கு முன்னால் நடிப்பது எனக்குப் பிடிக்காது, நிகழ்காலத்தில் வாழ்வது எனக்குப் பிடிக்கும். ஒரு காட்சியில் வசனம் இல்லாவிட்டாலும், அந்தக் கதாபாத்திரம் என்ன உணர்கிறது என்பதை பார்வையாளர்கள் உணர வேண்டும் என்று விரும்புகிறேன். ஒருவேளை அதுதான் என் பலம். நான் யாரையும் ஈர்க்க முயற்சிக்கவில்லை, இணைக்க முயற்சிக்கிறேன்.