மகேஷ்பாபுவின் கிண்டலுக்கு பிரியங்கா சோப்ரா பதில் | புராண பின்னணியில் புதிய அனிமேஷன் பாகுபலி : டீசர் வெளியீடு | தென்னிந்திய சினிமா தான் 'பெஸ்ட்', ஹிந்தியில் 'ஸ்லோ': ஷ்ரத்தா தாஸ் | கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு | இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி |

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இதன் படப்பிடிப்பிற்காக அவ்வப்போது ஐதராபாத் வந்து செல்கிறார். அப்படி வந்து செல்லும்போதெல்லாம் ஐதராபாத்தில் பல பகுதிகளில் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் மகேஷ்பாபு, ராஜமவுலி, வில்லனாக நடிக்கும் நடிகர் பிரித்விராஜ் ஆகியோருக்கு இடையே எக்ஸ் பக்கத்தில் நடந்த சுவாரசியமான உரையாடலில் மகேஷ்பாபு ராஜமவுலியிடம், “நீங்கள் எப்போது சார் மகாபாரதத்தை ஆரம்பிக்க போகிறீர்கள் ? ஏற்கனவே நம்முடைய தெலுங்கு பெண் ஒருவர் (பிரியங்கா சோப்ரா) கடந்த ஜனவரியில் இருந்து இதற்காகவே ஐதராபாத் வீதிகள் ஒன்று விடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பிரியங்கா சோப்ராவை குறிப்பிட்டு கிண்டல் அடித்திருந்தார்.
அதற்கு தற்போது கிண்டலாக பதில் சொல்லும் விதமாக விடியற்காலையில் ஐதராபாத் தெருக்களில் தான் எடுத்த சில புகைப்படங்களை மகேஷ்பாபுவின் பெயரை குறிப்பிட்டு பகிர்ந்து கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. அது மட்டுமல்ல, “ஹலோ ஹீரோ நீங்கள் படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் சொன்ன கதைகளை எல்லாம் வெளியில் நான் லீக் பண்ண வேண்டும் என விரும்புகிறீர்களா?” என்றும் கிண்டலாக கேட்டுள்ளார்.