8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

ஸ்ரீகாந்த் தனது இரண்டாவது ரவுண்டில் சில படங்களில் ஹீரோவாகவும், முக்கிய கேரக்டரிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தார். தற்போது வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் அவரும், ஷாமும் நாயகனாக நடித்திருக்கும் 'தி ட்ரெய்னர்' படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. பி. வேல்மாணிக்கம் இயக்குகிறார். பிரின்ஸ் சால்வின் இளம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் படம் வெளிவரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நாய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருடன் 'லீ' என்ற நாயும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. காவல்துறை அதிகாரியாக ஷ்யாம் நடித்திருக்கிறார்.
அஞ்சனா கிருத்தி, புஜிதா பொன்னாட இருவரும் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்கள், வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே.ஆர்.எம்.ராஜ் மோகன் , பிரியங்கா ராய், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்திருக்க, கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் வேல்மாணிக்கம் கூறியதாவது: பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு காவல் துறை உருவாக்கிய 'காவலன்' செயலியிலிருந்து உத்வேகம் பெற்று சமூகப் பொறுப்புள்ள படமாக இது உருவாகியுள்ளது. ஆக்ஷன், எமோஷன் மற்றும் சமூக பொறுப்புள்ள படமாக உருவாகியுள்ளது என்றார்.




