ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வரும் ஸ்ரீலீலா, தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் பராசக்தி படத்தை பெரிய அளவில் தான் எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், ''தெலுங்கில் நான் பல படங்களில் நடித்திருந்த போதும் அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. பெரும்பாலும் கிளாமர் வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் 'பராசக்தி' படம் எனது திரை வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.
கடந்த காலங்களில் கிளாமர் ஹீரோயினாக நடித்ததால் கவர்ச்சியான ஒரு பிம்பம் உருவாகிவிட்டது. ஆனால் பராசக்தி படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பீரியட் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் இதுவரை பார்த்திராத ஸ்ரீ லீலாவை பார்க்கலாம். இதன்பிறகு என் மீது விழுந்துள்ள கவர்ச்சி பிம்பம் மாறத்தொடங்கி விடும்'' என்கிறார் ஸ்ரீ லீலா.




