ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

சமீபத்தில் 2024ம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்த முறை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஆண், பெண் என இரண்டு பிரிவுகளிலும் யாருக்கும் விருது வழங்கப்படவில்லை. இது மலையாள திரையுலைகிலும் ரசிகர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விருதுக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரகாஷ்ராஜ் இது குறித்து கூறும்போது, “குழந்தைகளுக்கான படம் வருவதில்லை என்கிற வருத்தம் இருக்கிறது.. குழந்தைகளுக்கான படம் எடுப்பதை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்” என்று ஒரு அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி வெற்றியை பெற்ற மாளிகைப்புரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுமி தேவ நந்தா பிரகாஷ்ராஜின் விளக்கம் குறித்து கடும் சீற்றத்துடன் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் உங்கள் கண்களை மூடி கொண்டிருக்கலாம். அதற்காக இங்கே எல்லாமே இருட்டாக இருக்கிறது என்று சொல்லக்கூடாது. குழந்தைகளும் இந்த சமூகத்தில் ஒரு பாகம் தான். இந்த 2024 மலையாள சினிமா விடுதலைப் பொறுத்தவரை தலைமை தன்னுடைய கண்களை மூடிக்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த வருடம் ஸ்தானர்த்தி ஸ்ரீ குட்டன், கு, பீனிக்ஸ் மற்றும் அஜயன்டே ரெண்டாம் மோசனம் உள்ளிட்ட நான்கு படங்கள் இந்த பிரிவுகளில் தேர்வாகும் அம்சங்களுடன் இருந்தும் அதை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை. இரண்டு குழந்தைகளுக்கான விருதுகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு பின் எப்படி நீங்கள் குழந்தைகளுக்கான படங்களை எடுக்க வேண்டும், அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள்..? அந்த இரண்டு குழந்தைகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்திருந்தால் அதுதானே மற்றும் பலருக்கு உந்து சக்தியாக இருந்திருக்கும்” என்று கூறியுள்ள அவர், “ஜூரியின் இந்த முடிவு மட்டுமல்ல, இதை செய்துவிட்டு குழந்தைகளுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று சொல்லி இருப்பது தான் என் மனதை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.