சிம்புவின் இரண்டு படங்களுக்கு இசை சாய் அபயங்கர்? | இன்று 'அமரன்' 100வது நாள் விழா | இன்றைய ரிலீஸ் - 10 படங்களில் 1 மட்டும் மிஸ்ஸிங் | இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் |
நடிகர் பிரகாஷ்ராஜ் சினிமாவில் நடிப்பதோடு அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசு மற்றும் பா.ஜ.விற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். அதோடு இந்து மதம், இந்து கடவுள்கள், இந்து பண்டிகைகள் குறித்தும் விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் சனாதன தர்மம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ்ராஜ் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், 'சனாதன தர்மம் குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.